ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் கிறிஸ்து பிறப்புக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது - தொல்லியல் துறை

ஆதிச்சநல்லூர் அகழாய்வு

16 ஆண்டுகளாக ஆன பிறகும் ஏன் இது வரை அறிக்கை சமர்பிக்க வில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருள்களில் ஒன்று கி.மு. 905, மற்றொன்று கி.மு 791 காலகட்டத்தைச் சேர்ந்தது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

  செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

  ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்டது போல, பரம்பு உள்ளிட்ட சில இடங்களில் ஆய்வு நடத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

  இந்த வழக்கு விசாரணை இன்று வந்த போது, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழாய்வு மாதிரி பொருட்கள் அமெரிக்காவுக்கு கார்பன் பரிசோதனைக்கு அனுப்பட்ட ஒரு பொருளின் வயது கிமு 905, மற்றொரு பொருளின் வயது கி.மு 791 என தெரியவந்துள்ளதாக மத்திய தொல்லியல் துறை, தெரிவித்தது.

  தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என தெரிய வருகிறது என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  தொடர்ந்து, கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா?   என்று மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.

  வழக்கு விசாரணையில், 16 ஆண்டுகளாக ஆன பிறகும் ஏன் இது வரை அறிக்கை சமர்பிக்க வில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

  ஐ.பி.எல் தகவல்கள்:

  POINTS TABLE:


  SCHEDULE TIME TABLE:


  ORANGE CAP:


  PURPLE CAP:


  RESULTS TABLE:
  Published by:Karthick S
  First published: