குழந்தைகள் ஆபாசப் படத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை! ஏடிஜிபி எச்சரிக்கை

மாதிரிப் படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  குழந்தைகள் ஆபாச படங்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்தியோருக்கு, பத்தாண்டுகளுக்கு மேல் கடும் சிறை தண்டனை வழங்கப்படும் என ஏடிஜிபி ரவி எச்சரித்துள்ளார்.

  சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி பங்கேற்று பேசினார். அப்போது பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் என்றும், உயிருக்கு ஆபத்து நேரக்கூடிய சூழலில் பெண்கள் கொலை கூட செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது வரை ஆபாசப்படத்தை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக தமிழகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் ஆபாசப் படத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தினால் 10 ஆண்டுகளும் மேலான கடும் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

  இது பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஏடிஜிபி ரவி குழந்தைகள் ஆபாச படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம், பதிவிறக்கம் மற்றும் பகிர்ந்து தொடர்பாக கோவையில் நேற்று இரு நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் ஒருவர் டிரைவர் எனவும் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் தற்போது வரை குழந்தைகள் ஆபாச படத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பதிவேற்றம் செய்ய தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  இதில் கோவையில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் ஓட்டுநர் எனவும் குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது இது போன்ற மனநிலை உள்ளவர்கள் மிக ஆபத்தானவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

  தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் 3000 ஐபி முகவரியில் தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் ஆபாச படங்கள் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது எந்த மாவட்டத்தில் நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

  மேலும் தற்போது வரை கைது செய்யப்பட்ட தமிழகத்தில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் இதை பொழுதுபோக்காக செய்து கொண்டு இருந்தார்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களில் யாரேனும் ஒருவர் குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலான கடும் சிறை தண்டனை வழங்கப்படும் என ஏடிஜிபி தெரிவித்துள்ளார்

  சென்னையில் ஏற்கனவே இரண்டு கட்டமாக சுமார் 75 ஐபி முகவரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் அடுத்து ஒரு லிஸ்ட் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Also see:


   
  Published by:Karthick S
  First published: