சென்னையில் தான் குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்போர் அதிகம் - கைது நடவடிக்கையில் காவல்துறை

சென்னையில் தான் குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்போர் அதிகம் - கைது நடவடிக்கையில் காவல்துறை
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: December 4, 2019, 9:50 AM IST
  • Share this:
தமிழகத்தில் இணைய தளங்கள் மூலம் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்த ஆயிரக்கணக்கானவர்களின் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாகவும், அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்படுகிறது.

இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, தவறான வழியில் செல்லும் இளம் வயதினர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலமே முடியும் என்ற நோக்கத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் வெளியான அமெரிக்க புலனாய்வு துறையின் ஆய்வறிக்கையில், குழந்தைகளின் ஆபாச படங்களை இந்தியாவில் தான் அதிகம் பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இந்த எண்ணிக்கை அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதனடிப்படையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் பட்டியலைத் தமிழக காவல் துறைக்கு மத்திய உள்துறை அனுப்பி வைத்துள்ளது.அந்த பட்டியலின் அடிப்படையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் என கைது நடவடிக்கை தொடங்கும் என கூடுதல் டி.ஜி.பி ரவி எச்சரித்துள்ளார்.

வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினால் அவர்கள் கண்காணிக்கபட்டு, கைது செய்யபட்டு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

Also see...
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading