ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு மேலும் ஒரு பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு... நாளை முன்பதிவு தொடக்கம்

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு மேலும் ஒரு பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு... நாளை முன்பதிவு தொடக்கம்

பொங்கல் சிறப்பு ரயில்

பொங்கல் சிறப்பு ரயில்

இந்த தாம்பரம் திருநெல்வேலி அதிவிரைவு ரயில், ஜனவரி 14-ம் தேதி இரவு 10:20 மணிக்கு தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு புறப்படும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட கட்டண சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு மேலும் ஒரு பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் ஒரு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - திருநெல்வேலி அதிவிரைவு ரயில், ஜனவரி 14-ம் தேதி இரவு 10:20 மணிக்கு தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு புறப்படும் எனவும் ஜனவரி 15ம் தேதி 9 மணிக்கு நெல்லையை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில், ஜனவரி 18-ம் தேதி நெல்லையிலிருந்து மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4:10க்கு சென்னை எழும்பூருக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு கட்டண முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

தெற்கு ரயில்வேயின் சார்பில் ஏற்கனவே 5 சிறப்புகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்த சூழலில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மேலும் ஒரு ரயில் சேர்க்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Pongal festival, Southern railway, Special trains