• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் - முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் - முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

  • Share this:
    தமிழகம் முழுவதும் அக்டோபர் 31ம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் , பொதுத்துறை மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும், நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 1200 கீழ் குறைந்துள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும், வருகிற தீபாவளி பண்டிகையொட்டிபொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் நடைபெற உள்ள கூட்டத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    Also Read : துரை வைகோ கட்சிக்கு வருவதில் தவறில்லை, ஆனால்..? மதிமுகவில் இருந்து விலகிய ஈஸ்வரன் ஆதங்கம்

    குறிப்பாக, அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்துவதற்கான தளர்வுகள் அளிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.. அதேபோல், பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காத வகையில்,அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்துவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: