மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம்

மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம்

மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பத்திரப்பதிவு துறை தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பத்திரப்பதிவு துறை தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

 • Share this:
  தமிழக முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பத்திரப்பதிவு துறையின் வருவாயை பெருக்கும் வகையில், சித்திரை முதல் நாளான (14.04.2021), ஆடிப்பெருக்கு நாளான (03.08.2021), மற்றும் தைப்பூசம் நாளான (18.01.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலங்களை செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்திட ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய நாட்களில் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

  அந்த கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலனை செய்ததில், சித்திரை முதல் நாளான (14.04.2021), ஆடிப்பெருக்கு நாளான (03.08.2021), மற்றும் தைப்பூசம் நாளான (18.01.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலங்களை செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்து வந்தநிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  \

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: