Home /News /tamil-nadu /

குரூப் 2 முதல்நிலைத் தேர்வுகளில் மீண்டும் பொது ஆங்கில பாடத்திட்டம் சேர்ப்பு..

குரூப் 2 முதல்நிலைத் தேர்வுகளில் மீண்டும் பொது ஆங்கில பாடத்திட்டம் சேர்ப்பு..

TNPSC

TNPSC

குரூப்-2 முதல்நிலை தேர்வுகளில் தமிழ் கலாச்சாரம் தமிழர் பண்பாடு திருக்குறள் தமிழ் மொழி வளர்ச்சி சங்க கால இலக்கியம் போன்றவற்றை அறிந்திருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் ..

    கடந்த 2019 ம் ஆண்டு குரூப் 2 பாடத்திட்டம் மாற்றப்பட்டு பொது ஆங்கில பகுதி நீக்கப்பட்டு தமிழ்நாடு நிர்வாகம், தமிழர் கலாச்சாரம் ,தமிழர் பண்பாடு ,திருக்குறள் , சங்க காலம், தற்கால தமிழ் மொழி வளர்ச்சி உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் முதல்நிலை தேர்வுகளில் பொது ஆங்கிலம் சேர்க்கப்பட்டுள்ளது.

    வெளிமாநிலத்தவர்கள் தமிழக அரசு பணிகளில் சேருவதை தவிர்க்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் இடம்பெற்றிருந்த பொது ஆங்கில பாட திட்ட முறை நீக்கப்பட்டு புதிய பாட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது அதனடிப்படையில் குரூப்-2 முதல்நிலை தேர்வுகளில் தமிழ் கலாச்சாரம் தமிழர் பண்பாடு திருக்குறள் தமிழ் மொழி வளர்ச்சி சங்க கால இலக்கியம் போன்றவற்றை அறிந்திருந்தால் மட்டுமே முதல்நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும் ..

    இந்த நிலையில் இன்று அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் ஆகிய பாடப்பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது .

    Also read:  கட்டாய தமிழ்.. TNPSC புதிய Syllabus , Model Question Paper வெளியீடு

    அதேநேரத்தில் முதல் நிலை தேர்வுகளில் தேர்சி பெற்றாலும் குரூப் 2 முதன்மை தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் தகுதித் தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே முதன்மை விடைத்தாள் திருத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதன்மூலம் வெளிமாநிலத்தவர்கள் தமிழக அரசுப்பணிகளில் நுழைவதைத் தடுக்க முடியும் என அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவிக்கின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பொது ஆங்கிலப் பகுதி தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    Published by:Arun
    First published:

    Tags: Group 2 exam, TNPSC

    அடுத்த செய்தி