மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் அருகே அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர். பி.உதயகுமாரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசுகையில், “பொதுவா ஜல்லிக்கட்டு என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் திமுக மாதிரி பூம்பூம்மாடு கிடையாது. அங்கே வருவது எல்லாம் கொம்பு வைத்த சிங்கம் அதை அடக்குவது தனி அழகுதான். ஜல்லிக்கட்டு பார்ப்பதற்காக டி.வி போட்டேன் பார்த்தவுடன் மனது கஷ்டமாக இருந்தது ஜல்லிக்கட்டு பார்க்க 2 பேர் வந்திருந்தனர் விவரம் கெட்ட ராகுல்காந்தியும் விவஸ்த கெட்ட உதயநிதி ஸ்டாலின் வேடிக்கை பார்க்க வந்தனர்.
இதில் ஒருத்தருக்கு பிரதமர் கனவு, இன்னொருத்தருக்கு முதல்வர் கனவு அதற்கு இரண்டு பேரும் சரிப்பட்டு வரமாட்டார்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வந்துவிட்டு இப்பொழுது ஜல்லிக்கட்டு பார்க்க வந்துள்ளனர். மக்கள் போராட்டத்தை மதித்து அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் பிரதமரிடம் பேசி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தவர்.
ஸ்டாலின் டிசைன் டிசைனாக விளம்பரம் தருவார் நமக்கு நாமே வருங்கால முதல்வரே என போஸ்டர் ஒட்டி பொழப்பை ஓட்டினார். 2016 தேர்தலில் கோபப்படுங்கள் என்று கூறினார் மக்கள் கோபப்பட்டு நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டாம் என கூறினார். இந்த தேர்தலுக்கு கிராமசபை கூட்டம் என்று கூட்டினார். அங்கு போனவர்கள் எல்லாரும் கரவை மாடு, கட்டிய புருஷனை காணோம் என்று கூறினர்.
பின்னர் விடியலை நோக்கி என போர்டு வைக்க ஆரம்பித்தார். ஆனால், திமுகவினர் பிரச்சனை பண்ணி கல்லாபெட்டி தூக்கி செல்வர் திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான் இப்போது புதிதாக விளம்பர பாட்டு ஒன்னு வைத்துள்ளார், ஸ்டாலின் தான் வராரு என்று உண்மையைச் சொல்றவன் ஒருத்தன் எழுதி இருந்தால் ஸ்டாலின்தான் வராரு மக்களெல்லாம் உஷாரு திமுக ஆட்சிக்கு வந்தால் பேஜாரு, பிரியாணி கடை ஆடிப்பாரு பியூட்டி பார்லர் உள்ள உதைப்பார் செல்பி எடுத்தால் பளாரென்று விடுவார், பிள்ளையை மட்டும் வளர்ப்பார் உண்மை தொண்டரை உதைப்பார் இதுதான் அவருடைய வரலாறு.
தேர்தல் வந்தால் போதும் கிளம்பி வந்து விடுவார், எல்லா கெட்டப்பும் போட்டுவிடுவார் பாட்டாளி பங்காளி வேஷங்கள் போடுவார், டிராக்டர் எல்லாம் ஓட்டுவார் மரண பீதியில் உள்ளனர். அண்ணா திமுகவை கண்டு, நாம் எப்படியாவது வந்து விடுவோம் என்று பார்க்கின்றனர் ஏமாற்ற வேண்டும் என நினைப்பவர்கள், வாய்க்கு வந்ததையெல்லாம் கூறுவார்கள் சொன்னதை எல்லாம் செய்ய மாட்டார்கள்.
அதிமுகவினர் சொன்னதை எல்லாம் செய்வார்கள் அதற்கு மேலும் செய்வார்கள். வாயை மட்டும் வைத்து மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி இரண்டு விரலை மட்டும் காட்டி மக்களுக்கு நன்மை செய்தவர் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி. திமுக மக்களுக்கு சொன்ன சோதனைகளை மட்டும் சொல்லி ஓட்டு கேட்க மாட்டோம். அம்மா ஆட்சி செய்த சாதனைகளை கூறியும் ஓட்டு கேட்போம்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாதிரி ஒரு ஆளை திமுகவில்காட்டுங்கள். பிணம் தின்னி கழுகு போல் காத்திருக்கும் கூட்டம் அம்மாவின் வரலாற்றை களங்கப்படுத்த காத்திருக்கிறது. அதிமுகவை காலி பண்ண பிணம் தின்னும் கழுகு போல் காத்திருக்கும் திமுகவிற்கு ஓட்டு போடும் முன் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள், அம்மாவின் வழிவந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியா, அராஜகம் செய்யும் ஸ்டாலின் ஆட்சியா?
Must Read : கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு இடையூறு செய்கிறது அரசு: மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
உயிரை விட்ட அம்மா அவர்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள் எப்போது தேர்தல் வந்தாலும் கடைசி தேர்தல் என்று கூறி ஏமாற்றிய கருணாநிதியின் திமுகவிற்கு இந்தத் தேர்தலில் கடைசி தேர்தல் என்று நீங்கள் சொல்ல வேண்டும்” இவ்வாறு கூறினார் நடிகை விந்தியா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, All India Anna Dravida Munnetra Kazhagam, Thirumangalam, TN Assembly Election 2021