ஸ்டாலின் தான் வராரு... தமிழக மக்களே உஷாரு... கிண்டலடித்த நடிகை விந்தியா

ஸ்டாலின் தான் வராரு... தமிழக மக்களே உஷாரு... கிண்டலடித்த நடிகை விந்தியா

விந்தியா | மு.க.ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் பிரசார பாடலை கிண்டலடித்து நடிகை விந்தியா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

  • Share this:
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தங்களது கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களை பிரசாரத்தில் களமிறக்கியுள்ளனர். இந்நிலையில் நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான நடிகை விந்தியா பழனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து ஆயக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது திமுக தேர்தல் பிரசார பாடலான ஸ்டாலின் தான் வராரு என்ற பாடலை கிண்டலடித்து பாடிய விந்தியா, ஸ்டாலின் தான் வராரு.. தமிழக மக்களே உஷாரு என்று திமுக மீதான அதிமுகவின் விமர்சனங்களை பாடலாக பாடினார். அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் விந்தியாவின் பாடலை வெகுவாக ரசித்தனர்.

அதிமுக - பாஜக கூட்டணியில் பெரும்பாலான நடிகர்கள் தங்களை இணைத்துக் கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் வையாபுரி, சிங்கமுத்து, விந்தியா, குண்டு கல்யாணம் உள்ளிட்டோர் அதிமுக சார்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட நகைச்சுவை நடிகர் செந்தில் தமிழகம் முழுக்க பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வேன் என்று தெரிவித்திருந்தார். எனவே வரக்கூடிய நாட்களில் பெரும்பாலான திரைபிரபலங்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

இதுதவிர கடந்தமுறை காங்கிரஸூக்கு பிரசாரம் மேற்கொண்ட நடிகை குஷ்பு இந்தமுறை பாஜகவின் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், விருகம்பாக்கம் தொகுதியில் நடிகரும், பாடலாசிரியருமான சினேகன் போட்டியிடுகிறார். அதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பாக சென்னை மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீப்ரியா போட்டியிடுகிறார்.
Published by:Sheik Hanifah
First published: