அதிமுகவில் அளிக்கப்பட்ட கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பொறுப்பு குறித்து நடிகை விந்தியா விளக்கம்..

அம்மாவும் நானும் சமமில்லை - அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு குறித்து விந்தியா விளக்கம் அளித்துள்ளார்

அதிமுகவில் அளிக்கப்பட்ட கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பொறுப்பு குறித்து நடிகை விந்தியா விளக்கம்..
விந்தியா
  • Share this:
அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதன் பின்னர் நிர்வாகிகள் யாரும் செய்தியாளர்களை சந்திக்க வில்லை, ஆனால் விந்தியா மட்டும் சந்தித்தார்.

அப்போது பேசிய விந்தியா, அதிமுகவில் தனக்கு வழங்கப்பட்டிருப்பது பதவி அல்ல மிகப்பெரிய பொறுப்பு என்று கூறினார். இந்த பொறுப்பின் தன்மையை உணர்ந்து கவனமாக கையாண்டு மக்களிடம் கட்சியின் சாதனைகளை, கொள்கைகளை கொண்டு சேர்ப்பேன் என்று தெரிவித்தார்.


முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.  அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன் என்றும் குறிப்பிட்டார்.

அதன் பிறகு அதிமுகவின்  கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற பெரிய பதவி உங்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. தொடக்கத்தில் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற பதவியைப் பெற்றவர்தான் ஜெயலலிதா நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்தவர், அம்மாவுக்கு கொடுக்கப்பட்டது கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு, எனக்கு கொடுக்கப்பட்டது துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு மட்டுமே. அம்மாவும் நானும் ஒன்றல்ல என்று கூறினார்.

மேலும் படிக்க...பிளஸ் 1 பொதுத்தேர்வு & பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு

மேலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிச்சயமாக அனைவரது நம்பிக்கையை பெறும் வகையில் நான் செய்து காட்டுவேன் என்று தெரிவித்தார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading