குன்னூரில் படுகர் இனத்தவர் போல உடையணிந்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடிகை விந்தியா!

நடிகை விந்தியா

குன்னூரில் படுகர் இனத்தவர் போல உடையணிந்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடிகை விந்தியா திமுக ஆட்சியில் இல்லாததால்  கட்டப் பஞ்சாயத்து, ரவுடிசம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இல்லை என்று  பேசினார்.

 • Share this:
  படுகர் இனத்தவர் போல உடையணிந்து  அதிமுக வேட்பாளர் வினோத்தை ஆதரித்து அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளரும் நடிகையுமான விந்தியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி. வினோத் போட்டியிடுகிறார். இந்நிலையில் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி பகுதியில்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளரும்,  நடிகையுமான விந்தியா பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  படுகர் இன மக்களை போல உடையணிந்து பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் விந்தியா. பிரச்சாரத்தின் போது கடந்த முறை தேர்தலில்   திமுக  தோற்றதிற்கு ராசாவுடைய ஊழல் என்றும் இந்த முறை திமுக டெபாசிட் இழக்கும் அதற்கு  காரணம் ராசாவுடைய வாய் என்று பேசினார். தொடர்ந்து பேசுகையில் அதிமுக தேர்தல் அறிக்கையின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

  அதிமுக ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் வழங்குவதாக சொன்னார்கள் அதை செய்து காட்டியுள்ளனர். அதேபோன்று மாணவ மாணவியருக்கு இலவச மடிக் கணிணி, தாய்மார்களுக்கு தாலிக்கு தங்கம் போன்ற ஜெயலலிதா கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் நிறைவேற்ற பட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கிவருது அதிமுக என்று பேசினார்.

  திமுக ஆட்சியில் இல்லாததால்  கட்டப் பஞ்சாயத்து, ரவுடிசம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இல்லை என்று  பேசினார். மேலும் தேர்தல் நெருங்கிவிட்டால் பல வேஷங்கள் போட்டு கொண்டு ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என்று பேசினார்.

  ஜார்ஜ் வில்லியம்ஸ் - ஊட்டி செய்தியாளர்
  Published by:Arun
  First published: