சீமான், ஹரி நாடார் மீது குற்றம்சாட்டி, நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

சீமான், ஹரி நாடார் மீது குற்றம்சாட்டி, நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி
நடிகை விஜயலட்சுமி
  • Share this:
சீமான் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தவர் நடிகை விஜயலட்சுமி. அவர், சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக சீமான் மீது பேஸ்புக் லைவ்வில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.இன்று அவருடைய ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘நான், எனது அம்மாவுக்கும் அக்காவுக்காவும்தான் உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது அந்த எண்ணம் இல்லை. என்னை, ஹரி நாடார் நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறி இழிவாக பேசினார். மேலும், என்னுடைய சாதி குறித்தும் பேசினார். சீமான் மீதும், ஹரி நாடார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில், விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading