சொந்த மாநிலத்துக்குத் திரும்பும் 2000 தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நடிகை வரலட்சுமி

சொந்த மாநிலத்துக்குத் திரும்பும் 2000 தொழிலாளர்களுக்கு நடிகை வரலட்சுமி நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

சொந்த மாநிலத்துக்குத் திரும்பும் 2000 தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நடிகை வரலட்சுமி
நடிகை வரலட்சுமி. தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
  • Share this:
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பிகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார், தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) அறக்கட்டளை சார்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே சென்று அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வந்தார்.

அதேபோல், தற்போது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்குக் கிளம்பினர். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முகக்கவசம் மற்றும் மருத்துவப் பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை இன்று நடிகை வரலட்சுமி சரத்குமார் வழங்கினார்.

Also see: 

நடிகை வரலட்சுமி சரத்குமார், அவரின் தாய் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுடன் துரிதமாகச் செயல்பட்டு இந்தப் பொருட்களை அனைவருக்கும் வழங்கினர். இந்தப் பணியை நல்லபடியாக செய்ய உதவிய சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, இந்திய ரயில்வே துறை, திரு.கவுதம் சந்தர் மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறினார்.மேலும் சேவ் சக்தி அறக்கட்டளை சார்பாக பசியால் வாடும் நாய், மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும் வரலட்சுமி சரத்குமாரும் அவரது தாய் சாயா தேவியும் உணவளித்தும், மருத்துவ உதவிகளைச் செய்தும் வருவது குறிப்பிடத்தக்கது.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading