• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பல லட்சங்களை இழந்ததாக போலீசில் நடிகை சினேகா புகார்

பல லட்சங்களை இழந்ததாக போலீசில் நடிகை சினேகா புகார்

சினேகா

சினேகா

சினேகா முதலீடு செய்யும் போது ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 1.80 லட்சம் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தரப்பில் கூறியதாக தெரிகிறது.

  • Share this:
நடிகை சினேகா ஏற்றுமதி நிறுவனத்தினர் தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான சினேகா ஏற்றுமதி நிறுவனத்தினர்  தன்னை ஏமாற்றி விட்டதாக  சென்னை கானாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளர். நடிகை சினேகா  ரூபாய் 25 லட்சத்தை கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். சினேகா முதலீடு செய்யும் போது ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 1.80 லட்சம் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தரப்பில் கூறியதாக தெரிகிறது. இதனை நம்பி நடிகை சினேகா பணத்தை முதலீடு செய்துள்ளார். இதுதொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒப்பந்தப்படி மாதந்தோறும் பணத்தை அந்நிறுவனம் தரவில்லை. இதனால் அந்நிறுவனம் ஏமாற்றி விட்டதாக கூறி நடிகை சினேகா கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: