• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • விசாரணையிலும் அதே சத்தம்தான்.. அடம்பிடிக்கும் மீரா மிதுன் - ஆண் நண்பரையும் அள்ளி வந்த போலீஸ்

விசாரணையிலும் அதே சத்தம்தான்.. அடம்பிடிக்கும் மீரா மிதுன் - ஆண் நண்பரையும் அள்ளி வந்த போலீஸ்

நடிகை மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன்

கேரளாவில் கைதான நடிகை மீரா மிதுனை போலீஸ் வாகனம் மூலமாக சென்னை கொண்டு வந்தனர்.

 • Share this:
  நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

  நடிகை மீரா மிதுன் சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்துவது இவரது வாடிக்கை. நடிகர் விஜய், சூர்யா குறித்து சில கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களின் அர்ச்சணைகளை வாங்கிக்கொண்டார். அடுத்து முன்னணி நடிகைகளை டார்க்கெட் செய்து அந்த நடிகை என்னை காப்பி அடிக்கிறார் இந்த நடிகை இப்படி செய்கிறார் என பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

  சமீபத்தில் இவர் பட்டியலின மக்கள் குறித்து பேசியது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து இவர் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்தது. மீரா மிதுனை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  நடிகை மீரா மிதுன் மீது புகார்கள் குவியத் தொடங்கியதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை தரப்பில் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து மீரா மிதுன் தலைமறைவானார்.

  Also Read: டார்ச்சர் பண்றாங்க.. பிரதமரே.. முதல்வரே.. கைதுக்கு முன் நடிகை மீரா மிதுன் கதறல்!

  இதனையடுத்து சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார், அதில், “ என்னை தாராளமாக கைது செய்யுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு செல்லவில்லையா என்ன? என்னை கைது செய்வது நடக்காது அப்படி நடந்தால் அது கனவில் மட்டுமே நடக்கும். எல்லாரையும் நான் தவறானவர்கள் என்று கூறவில்லை.என்னை தொந்தரவு செய்தவர்களை மட்டுமே நான் கூறினேன். என்னை தொந்தரவு செய்கிறார்கள் புகார் கொடுத்தேன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..’ என கூறியிருந்தார்.

  மீரா மிதுன்


  மீராமிதுன் கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதனையடுத்து திருவனந்தபுரம் விரைந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுனை கைது செய்தனர். அவர் தங்கியிருந்த இடத்துக்கு போலீஸார் சென்றதும் அதனையும் வீடியோவாக எடுத்துப்போட்டார் மீரா மிதுன். “ இந்த ஆண்கள் எல்லோரும் என்னை துன்புறுத்துகின்றனர். முதலமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படி தான் நடக்கனுமா? ஒரு பொண்ணுக்கு நிஜமாகவே இப்படி தான் நடக்கனுமா? எல்லோரையும் வெளியே போக சொல்லுங்க.. போலீஸ்னா அராஜகம் பன்னுவீங்களா.என் போன தர முடியாது. கத்திய எடுங்க.. என்ன குத்திட்டு இங்க இருந்து என்ன வெளியே எடுத்துட்டு போங்க.. நான் இங்கேயே குத்திட்டு செத்துருவேன்.. முதலமைச்சர் அவர்களே, பிரதமர் மோடி அவர்களே, இந்த தமிழ்நாடு போலீஸ் என்ன ரொம்ப டார்ச்சர் பன்றாங்க ” என அதில் கூறியிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கேரளாவில் கைதான நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் வாகனம் மூலமாக சென்னை கொண்டு வந்தனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மீரா மிதுன் உடன் தங்கியிருந்த அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசார் கேரளாவில் இருந்து அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

  மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னுடைய வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் அதுவரை பேசமாட்டேன் என தொடர்ந்து அடம்பிடித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: