கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

நடிகை மீரா மிதுனுக்கு 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு ஆக.27 வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்துவது நடிகை மீரா மிதுனின் வாடிக்கை. சமீபத்தில் இவர் பட்டியலின மக்கள் குறித்து பேசியது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து இவர் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்தது.

    இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை தரப்பில் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து மீரா மிதுன் தலைமறைவானார்.

    இதனையடுத்து சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார், அதில், “என்னை தாராளமாக கைது செய்யுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு செல்லவில்லையா என்ன? என்னை கைது செய்வது நடக்காது அப்படி நடந்தால் அது கனவில் மட்டுமே நடக்கும்.

    Also read: விசாரணையிலும் அதே சத்தம்தான்.. அடம்பிடிக்கும் மீரா மிதுன் - ஆண் நண்பரையும் அள்ளி வந்த போலீஸ்

    எல்லாரையும் நான் தவறானவர்கள் என்று கூறவில்லை.என்னை தொந்தரவு செய்தவர்களை மட்டுமே நான் கூறினேன். என்னை தொந்தரவு செய்கிறார்கள் புகார் கொடுத்தேன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..’ என கூறியிருந்தார்.

    இதனிடையே, மீராமிதுன் கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதனையடுத்து திருவனந்தபுரம் விரைந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுனை கைது செய்தனர். அவர் தங்கியிருந்த இடத்துக்கு போலீஸார் சென்றதும் அதனையும் வீடியோவாக எடுத்துப்போட்டார் மீரா மிதுன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து, கேரளாவில் கைதான நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் வாகனம் மூலமாக சென்னை கொண்டு வந்தனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நடிகை மீரா மிதுனை ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
    Published by:Esakki Raja
    First published: