புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவளித்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்; பாஜகவுக்கு செல்லவில்லை - நடிகை குஷ்பு விளக்கம்

புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து குஷ்பு கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதற்கான விளக்கத்தை தற்போது அளித்துள்ளார். மேலும், தான் பாஜகவுக்கு செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவளித்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்; பாஜகவுக்கு செல்லவில்லை - நடிகை குஷ்பு விளக்கம்
நடிகை குஷ்பு
  • Share this:
புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதை வரவேற்பதாக தனது டிவிட்டரில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்திருந்தார்.

புதிய கல்விக்கொள்கையின் பல அம்சங்களை காங்கிரஸ் விமர்சித்துவந்த நிலையில், குஷ்புவின் திடீர் கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து மீண்டும் குஷ்பூ டிவிட் செய்துள்ளார். அதில், புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது என்றும், அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.ஆனால் நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன் என தெரிவித்துள்ளார்.  எந்தவொரு மசோதா அல்லது வரைவு குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் எனவும், தான் ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் ஒருவர் எனவும், கருத்து வேறுபாடு இருப்பது நல்லது என்று நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also read... கொரோனா நோயாளிகளின் விருப்பத்திற்காக பிரியாணி வழங்க ஏற்பாடு செய்த அமைச்சர்!

தான் பாஜகவுக்கு செல்லவில்லை என்றும், என் கருத்து கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம் ஆனால், நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர் என தெரிவித்துள்ள அவர், புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.இதில் உள்ள நேர்மறையான அம்சங்களைக் காண விரும்புவதாகவும், எதிர்மறையானவற்றில் மாற்றம் செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி என்பது நாட்டின் எதிர்காலத்திற்காக உழைப்பதாகும் எனவும், அரசியல் என்பது சத்தம் போடுவது மட்டுமல்ல, அது ஒன்றிணைந்து செயல்படுவதும் ஆகும். இதை பா.ஜ.க புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading