• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வாக்களிக்க சென்றபோது பாஜக கொடி கட்டிய காரில் பயணித்த விவகாரம் : நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு

வாக்களிக்க சென்றபோது பாஜக கொடி கட்டிய காரில் பயணித்த விவகாரம் : நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு

குஷ்பு

குஷ்பு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    கட்சி கொடியுடன் வாக்குபதிவு மையத்துக்கு காரில் சென்று தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக நடிகை குஷ்பு மீது பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகையும், ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளருமான குஷ்பு வாக்களித்தார். அப்போது, தனது காரில் பாஜக கொடியுடன் வாக்குச்சாவடிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது விதி மீறலில் ஈடுபட்டதாக நடிகை குஷ்பு மீது  கோடம்பாக்கம் போலீஸார், சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்படுதல் ஆகிய பிரிவுகளின்கீழ்  வழக்குப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... எச்சரிக்கும் அதிமுக, திமுக.. என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: