முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ‘விசிக ஆட்சியில் பூணூல் அணிய தடை’ - வன்னி அரசின் கருத்துக்கு நடிகை கஸ்தூரி பதிலடி

‘விசிக ஆட்சியில் பூணூல் அணிய தடை’ - வன்னி அரசின் கருத்துக்கு நடிகை கஸ்தூரி பதிலடி

கஸ்தூரி - வன்னி அரசு

கஸ்தூரி - வன்னி அரசு

VCK Vanni Arasu: விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாட்டை ஆளும் காலம் விரைவில் வருகிறது. எழுச்சித் தமிழர் திருமாவளவன் முதல்வராகும் காலத்தை தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. - வன்னி அரசு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பூணூல் குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வன்னி அரசுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி தந்துள்ளார்.

ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, சீக்கியர்களுக்கு தலைப்பாகை அணிய அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. அவர்களைத் தவிர பள்ளி கல்லூரிகளுக்கு மத அடையாளங்களை கொண்டு செல்ல அனைத்து மதத்தினருக்கும் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் ஹிஜாப் அணியாமல் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குள் செல்லும் சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாட்டை ஆளும் காலம் விரைவில் வருகிறது. எழுச்சித் தமிழர் திருமாவளவன் முதல்வராகும் காலத்தை தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்போது தமிழ்நாட்டில் பூணூல் அணிய தடை விதிக்கப்படும்.

இதையும் படிங்க - பூணூல் அறுப்பு போராட்ட அறிவிப்புக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம்

சனாதன ஒழிப்பின் முதல்பணி அதுவே. என்று கூறியருந்தார். அவரது பதிவு விவாதங்களை கிளப்பி வருகிறது.

இதையும் படிங்க - நில அளவைத் துறையில் ஆட்குறைப்பு செய்து, தனியார்மயமாக்க துடிப்பதா? - ராமதாஸ் கேள்வி

வன்னி அரசின் பதிவுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள நடிகை கஸ்தூரி, ''என்னது பூணூல் அறுப்பா? சனாதன அழிப்பா? பாத்து பேசுங்க, சேகர் ரெட்டி கோவிச்சுக்க போறாரு.

உள்ளே செய்வது ஒன்று, வெளியே பேசுவது ஒன்று என்று இல்லாமல் குறைந்தபட்ச மனசாட்சியுடன் நடந்துக்கொள்ளுங்கள். உங்களை நம்பும் சமூகத்தினரை ஏமாற்று வார்த்தை பேசி பலிஆடுகளாக்க வேண்டாம்.'' என்று கூறியுள்ளார்.

#பூணூல் என்று சொன்னவுடனே எதற்காக இந்த பதற்றம்?

பூணூல் என்பது இந்து மத அடையாளமா?

அல்லது பார்ப்பனர்களுக்கு மட்டுமான அடையாளமா?

#Hijab மத அடையாளம் என்றால்,

பூணூல் என்ன அடையாளம்? இவ்வாறு வன்னி அரசு கஸ்தூரிக்கு பதில் அளித்துள்ளார்.

இருவரின் பதிவுகளும் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Kasthuri tweet, Vanniarasu