• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 5 வருட பழக்கம்.. 3 முறை கர்ப்பம் கலைத்துள்ளேன் - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அடுக்கும் குற்றச்சாட்டுகள்..

5 வருட பழக்கம்.. 3 முறை கர்ப்பம் கலைத்துள்ளேன் - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அடுக்கும் குற்றச்சாட்டுகள்..

சாந்தினி

சாந்தினி

மணிகண்டனுடன் சட்டசபை உள்ளிட்ட பல இடங்களில் நெருக்கமாக சுற்றி திரிந்ததாகவும், இதை பலரும் பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.

  • Share this:
    5 ஆண்டுகளாக தன்னுடன் குடும்பம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக "நாடோடிகள்" திரைப்பட நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தான் 3 முறை கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடப் போவதாக மிரட்டுவதாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் நடிகை சாந்தினி. அமைச்சருடன் இருப்பது போன்ற புகைப்படங்களை ஆதாரங்களாக வெளியிட்டள்ள நிலையில், குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

    மலேசிய நாட்டை பூர்வீகமாக கொண்ட நடிகை சாந்தினி சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். 36 வயதான இவர் நாடோடிகள் உட்பட 5 தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலேசிய சுற்றுலா துறையிலும் பணிபுரிந்து வருகிறார்.

    Also Read: Parvathy: வைரமுத்துக்கு விருது - புயல் கிளப்பிய 'பூ' பார்வதியின் பின்னணி!

    இந்த நிலையில், சென்னை காவல்ஆணையர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்தார்.அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

    நடிகை சாந்தினி மலேசியா சுற்றுலா துறையில் பணிப்புரிந்த போது தொழில் சம்மந்தமாக அடிக்கடி தமிழகம் வந்து செல்வது வழக்கம்.அதுபோல் கடந்த 2017ஆம் ஆண்டு தொழில்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மலேசியாவில் தொழில் முதலீடு தொடர்பாக பேச வேண்டும் என நடிகை சாந்தினியுடன் நெருங்கி பழகியுள்ளார்.

     

    நாளடைவில் பழக்கம் காதலாக மாற, மணிகண்டன் தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு சாந்தினியை முறைப்படி திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்துள்ளார்.இதனை நம்பி கடந்த 5 வருடங்களாக அமைச்சர் மணிகண்டனுடன் ஒன்றாக வசித்து வந்ததாகவும், பல முறை உடலுறவில் ஈடுபட்டு 3 முறை கர்ப்பமாகி கருவை கலைத்தாகவும் சாந்தினி கூறினார்.

    மணிகண்டனுடன் சட்டசபை உள்ளிட்ட பல இடங்களில் நெருக்கமக சுற்றி திரிந்ததாகவும், இதை பலரும் பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.பல முறை மணிகண்டனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி ஒரு முறை தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.இருந்தாலும் தொடர்ந்து தன்னை பலவந்தப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டு வந்ததாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனுக்கு சாந்தினி போன் செய்த போது திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தினால் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் அமைச்சர் மணிகண்டன் மிரட்டியதாக சாந்தினி கூறினார்.

    அப்போது அதிமுக ஆட்சி காலம் என்பதால் தன்னால் புகார் அளிக்க முடியாமல் பயந்து இருந்ததாக கூறிய சாந்தினி, தற்போது தி.மு.க ஆட்சிக்க வந்துள்ளதால் துணிந்து புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

    மேலும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பரணி என்பவர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாகவும் அவர் கூறினார்.தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்ககோரியும்,தனது அந்தரங்க புகைப்படத்தை மணிகண்டனிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்றும் சைபர் கிரைம் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும் நடிகை சாந்தினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    தமிழக சட்டமன்றத்திற்கு தனது மனைவி என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் அழைத்துச் சென்றுள்ளதாகவும், டெல்லி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் சுதன் தெரிவித்தார்.கருக்கலைப்பு செய்த ஆவணங்களும், அமைச்சர் மணிகண்டனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் புகாருடன் சமர்பித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: