ஊட்டியில் மரங்கள் இருக்கலாம், மழை இல்லை.... வெற்றிமாறனுக்கு விவேக் பதிலடி!

நடிகர் விவேக் இன்று ஊட்டிக்கு அருகில் உள்ள எல்ல நள்ளி என்ற இடத்தில் கலெக்டருடன் இணைந்து மரங்கள் நடும் பணியில் ஈடுபடப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

news18
Updated: July 1, 2019, 11:20 AM IST
ஊட்டியில் மரங்கள் இருக்கலாம், மழை இல்லை.... வெற்றிமாறனுக்கு விவேக் பதிலடி!
நடிகர் விவேக்
news18
Updated: July 1, 2019, 11:20 AM IST
ஊட்டியில் நிறைய மரங்கள் இருக்கலாம், ஆனால் மழை இல்லை என்று நடிகர் விவேக் வெற்றிமாறன் என்பவருக்கு பதில் கூறியுள்ளார்.

நடிகர் விவேக் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி மரங்கள் நடும் சமூக பணிகளையும் செய்து வருகிறார். இன்று ஊட்டிக்கு அருகில் உள்ள எல்ல நள்ளி என்ற இடத்தில் கலெக்டருடன் இணைந்து மரங்கள் நடும் பணியில் ஈடுபடப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.இந்த பதிவுக்கு வெற்றி மாறன் என்பவர், ‘ஊட்டியில் ஏற்கனவே நிறைய மரங்கள் இருக்கிறது, மரங்கள் இல்லாத இடத்தில் உங்கள் பணியை மேற்கொள்ளுங்கள். இது என்னுடைய வேண்டுகோள்’ என்று பதிலளித்திருந்தார்.வெற்றிமாறனின் பதிவுக்கு நடிகர் விவேக், ‘ ஊட்டியில் நிறைய மரங்கள் இருக்கலாம். ஆனால் மழை இல்லை. காரணம் யூக்கலிப்ட் சில்வர்ஓக், கிருத்துமசு மரங்களால் மழையை ஈர்க்க முடியாது. அவை நிலத்தடி நீரை உரிஞ்சுவதோடு அதை ஆவியாக்குவதும் இல்லை. மலை நாட்டு மரங்கள் நடப்பட வேண்டும்’ என்று பதிலளித்துள்ளார்Also watch

First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...