விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது: தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை விளக்கம்

விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது: தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை விளக்கம்

நடிகர் விவேக்

நடிகர் விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

 • Share this:
  நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இதுதொடர்பாக சிம்ஸ் மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில், “சுயநினைவு இல்லாத நிலையில் குடும்பத்தினரால் நடிகர் விவேக் இன்று காலை 11 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வல்லுனர்கள் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். தற்போதைக்கு அவரது உடல்நிலை மோசமாக தான் உள்ளது.  உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல இது மாரடைப்பால் ஏற்பட்ட பிரச்னை’”என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: