முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்த ஜெயக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர் விஷால்

உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்த ஜெயக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர் விஷால்

மாதிரி படம்

மாதிரி படம்

வாரிசு அரசியல் என்ற விமர்சனம் வந்து மேலோட்டமாகத் தெரியுமே தவிர அந்தப் பதவிக்கு உதயநிதி தகுந்த அமைச்சராக இருப்பார்- விஷால்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உதயநிதி ஸ்டாலின் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு நடிகர் விஷால் காட்டமான பதில் அளித்துள்ளார். 

நடிகர் விஷாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஷால் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால்,  ‘முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சரான பிறகு உதயநிதி திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என்று கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த விஷால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடியிருக்கக்கூடாது’ என்று நான் சொல்கிறேன்.

அவர் நிறைய மேடைகளில் பாடியிருக்கிறார். அது சினிமா பாடல்கள் தானே. அதை தவிர்த்தால் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். ஒவ்வொரு துறையிலும் பயணிப்பதா இல்லையா என்பது அவரவர் எடுக்க வேண்டிய முடிவுகள் என ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கைகோர்த்த ரகுராம் ராஜன்!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றது குறித்து கேள்விக்கு பதிலளித்த விஷால், இதனை நேரில் பார்க்க வேண்டும் எனக் கிட்டத்தட்ட 9 வருடங்களாகக் கனவாக இருந்தது என்றும் இன்றைக்கு நினைவாகியிருக்கும்போது உதயநிதியின் ஒரு நண்பனாகப் பெருமைப்படுவதாக கூறினார். இனிமேல்தான் உதயா என்ற நண்பன் உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை முழுமையாக எல்லா இடத்திலும் பயன்படுத்தப் போகிறார் என்றார்.

வாரிசு அரசியல் என்ற விமர்சனம் வந்து மேலோட்டமாகத் தெரியுமே தவிர அந்தப் பதவிக்கு உதயநிதி தகுந்த அமைச்சராக இருப்பார் என முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருப்பார் என நான் நம்புகிறேன். உதயநிதிக்கு அமைச்சராக அனைத்துத் தகுதிகளும் இருக்கு என நானும் நம்புகிறேன் என பேசினார்.

First published:

Tags: Actor vishal, Udhayanidhi Stalin