முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வரிக்கட்டாத நடிகர் விஷாலுக்கு Fine போட்ட நீதிமன்றம்..

வரிக்கட்டாத நடிகர் விஷாலுக்கு Fine போட்ட நீதிமன்றம்..

விஷால்

விஷால்

10 முறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகாததால் அவருக்கு அபராதம் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சேவை வரி செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில் 10 முறை சம்மன் அனுப்பியும் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஷாலில் விசால் பிலிம் பேக்டரி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் சிக்கியதையடுத்து, உரிமையாளர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரிகள் பல முறை சம்மன் அனுப்பினர்.ஆனால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், கடந்த 2018ஆம் ஆண்டு சேவை வரித்துறை சார்பில் விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் நடந்தது.

Also Read: ஆர்ஆர்ஆர் படம் தள்ளிப்போனதற்கு முதல்வரின் முடிவு காரணமா?

அப்போது, 10 முறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை என்றும், இதன்காரணமாக அவர் மீதான விசாரணையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்றும் சேவை வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், சேவை வரித்துறையில் அவர் ஆஜராகாதது விசாரணைக்கு இடையூறு விளைவித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தை காட்டுவதாகவும், அதனால் நடிகர் விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Actor vishal, Crime News, South indian film industry