நடிகர் விஜயகுமார் வீட்டு சொத்து பிரச்னை: போலீஸை திருப்பி அனுப்பிய வனிதா

நடிகை வனிதா தனது தந்தை விஜயகுமார், மகன் அருண் விஜய்க்காக ஆலப்பாக்கம் வீட்டை கொடுக்குமாறு பிரச்னை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Web Desk | news18
Updated: December 7, 2018, 7:56 AM IST
நடிகர் விஜயகுமார் வீட்டு சொத்து பிரச்னை: போலீஸை திருப்பி அனுப்பிய வனிதா
நடிகை வனிதா
Web Desk | news18
Updated: December 7, 2018, 7:56 AM IST
நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதாவுக்கும் இடையில் நிலவிவந்த சொத்துப் பிரச்னையை உச்சநீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீட்டில், அவரது மகள் வனிதா கடந்த செப்டம்பரில் படப்பிடிப்பு நடத்தினார். படப்பிடிப்புக்கு பிறகும் அவர் அந்த வீட்டை காலி செய்யாததால் மதுரவாயல் போலீசிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் விஜயகுமார் புகார் செய்தார்.

இதையடுத்து, போலீசார் தலையிட்டு, நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றினர். அப்போது வனிதாவின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டதால், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் வீட்டின் உரிமை கோரியும் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வனிதா மனு தாக்கல் செய்தார்.

ஆலப்பாக்கம் வீட்டில் நடிகை வனிதா


அதனைத் தொடர்ந்து வீடு தனது வசம் இருப்பதாகவும், தனக்கு தமிழக போலீசார் பாதுகாப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வனிதா தெரிவித்தார். மேலும் தனது தந்தை விஜயகுமார், மகன் அருண் விஜய்க்காக இதுபோன்று பிரச்னைகளை செய்வதாக குற்றம்சாட்டிய வனிதா, தனது அம்மா மஞ்சுளாவின் ஆன்மா சாந்தியடையவில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையே, வீட்டைத் திறக்கும்போது தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசாரிடம் வனிதா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே வீட்டைத் திறந்துள்ளதாக அவர் தெரிவித்ததை அடுத்து போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர்.

Also see... பிரபலங்கள் 100 பட்டியலில் ரஜினி, விஜய், விஜய்சேதுபதி இடம்
Loading...
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்