Home /News /tamil-nadu /

ஏர்போர்ட் தாக்குதல்:நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஏர்போர்ட் தாக்குதல்:நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதை ரத்து செய்யக் கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த நடிகர் மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறிருக்க, ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

    எனவே உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

    இதையும் படிங்க: மத்திய அரசுடன் திமுக இணக்கமாக செல்ல வேண்டும்- பாஜக தலைவர் அண்ணாமலை


    இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்த து.

    இந்த நிலையில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

    மேலும் படிக்க: பயிற்சியின்போது தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு


    அந்த வழக்கில் பெங்களூர் விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சைதாபேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர முடியாது என்றும் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் சமரசம் செய்து கொண்ட நிலையில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். .இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கை நாளை மறுதினம் விசாரிப்பதாக தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Airport, Chennai High court, High court, Vijaysethupathi

    அடுத்த செய்தி