Home /News /tamil-nadu /

அரசியல் களத்தில் சாதித்த விஜய் ரசிகர்கள்: மாநிலம் முழுவதும் 51 பேர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி

அரசியல் களத்தில் சாதித்த விஜய் ரசிகர்கள்: மாநிலம் முழுவதும் 51 பேர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி

Youtube Video

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, அக்டோபர் 9-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. அதற்கா வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடும் பதவிகளான மாவட்டக் கவுன்சிலர், ஓன்றிய கவுன்சிலர் பதவிகளும் பெரும்பாலான இடங்களில் தி.மு.கவே வெற்றி பெற்றது.

    அ.தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன. அ.ம.மு.க, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சி ஒரு பகுதிகளில் கூட வெற்றி பெற முடியாத சூழலை அடைந்தன. இந்தத் தேர்தலில் நடிகர் விஜயின் தளபதி விஜய் மக்கள் இயக்கம்சார்பில் ஒன்பது மாவட்டங்களிலும் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். விஜய்யின் அனுமதியுடன் அவரது புகைப்படத்தினை அச்சிட்டு பிரச்சாரம் செய்து போட்டியிட்டனர்.

    இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட மன்ற நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தனர். அதில், மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 36 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 51 பேர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள். இந்த தகவலை தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்தியத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Actor vijay, Local Body Election 2021

    அடுத்த செய்தி