• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சித் தேர்தலில் நிர்வாகிகளை களமிறக்க நடிகர் விஜய் முடிவு?

உள்ளாட்சித் தேர்தலில் நிர்வாகிகளை களமிறக்க நடிகர் விஜய் முடிவு?

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தனது மன்ற நிர்வாகிகள் களமிறங்க விஜய் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல்.

  • Share this:
    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வரை தனது பெயரை அரசியல் களத்தில் பயன்படுத்த விருப்பம் காட்டாத விஜய், தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தனது மன்ற நிர்வாகிகள் களமிறங்க இசைவு தெரிவித்து, களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணிக்கு விஜய் அளித்த ஆதரவு, தலைவா திரைப்படத்திற்கு ஆளும் கட்சியால் ஏற்பட்ட திடீர் நெருக்கடி, சர்கார் திரைப்படத்தில் விஜய் பேசிய அரசியல், அதற்கு அதிமுக ஆற்றிய எதிர் வினை என அரசியல் களத்தில் விஜய் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கும் மேலாக தவிர்க்க முடியாத பெயராகவே இருந்து வருகிறார்.

    அண்மையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது படப்பிடிப்பு பணிகளை பாதியில் நிறுத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை சோதனைக்காக அவர்களது வாகனத்திலேயே சென்னைக்கு அழைத்து வந்ததனர், இதன்பிறகு, படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பிய விஜய் வாகனத்தின் மீது ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பரபரப்பை கூட்டினார்.

    இந்த சூழலில், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் பெயரில் கட்சி ஒன்றை பதிவு செய்தார். அப்போது தனக்கும், அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறி அறிக்கை விட்ட விஜய், தனது புகைப்படத்தையும், பெயரையும் பயன்படுத்த தடை கோரி நீதிமன்றம் வரை சென்றார். இதைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது, நடிகர் விஜய் சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விஜய் சைக்கிளில் வந்ததாக கூறி சமூக வலைத்தளத்தில் அரசியல் பற்றி பேசப்பட்ட நிலையில், இதனை விஜய் தரப்பு மறுத்து அறிக்கை வெளியிட்டது.

    சட்டமன்றத் தேர்தல் வரை தனது பெயரை அரசியல் களத்தில் பயன்படுத்த விருப்பம் காட்டாத விஜய், தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தனது மன்ற நிர்வாகிகள் களமிறங்க இசைவு தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் மன்றத்தின் கொடியையும் பெயரையும் பயன்படுத்த தடை இல்லை என்றும் விஜய் மக்கள் மன்றத்தின் சார்பில் நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Must Read : பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் நடிகர் அஜித்.. சாகசப் பெண்ணிடம் ஆலோசனை!

    தனது மன்ற நிர்வாகிகள் மக்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் எந்த அளவுக்கு பெறுகிறார்கள் என ஆழம் பார்க்க விஜய் முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு கிடைக்கும் ஆதரவை அடுத்து விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: