ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'100வது நாள் இன்று' புகைப்படத்துடன் அப்டேட்டை வெளியிட்ட பீஸ்ட் படக்குழு..

'100வது நாள் இன்று' புகைப்படத்துடன் அப்டேட்டை வெளியிட்ட பீஸ்ட் படக்குழு..

Beast Movie 100th Day Shooting : பீஸ்ட் படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு இன்று என படத்தின் இயக்குனர் பதிவிட்டுள்ளார்.

Beast Movie 100th Day Shooting : பீஸ்ட் படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு இன்று என படத்தின் இயக்குனர் பதிவிட்டுள்ளார்.

Beast Movie 100th Day Shooting : பீஸ்ட் படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு இன்று என படத்தின் இயக்குனர் பதிவிட்டுள்ளார்.

 • 1 minute read
 • Last Updated :

  இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலாமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஜாக்குலின் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.கோலாமாவு கோகிலா படத்தின் மூலம் நெல்சன் திலீப்குமாருக்கு பாராட்டுகள் கிடைத்தது. அதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தை இயக்கினார்.இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

  தற்போது விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

  இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.அதே போல் பீஸ்ட் படமும் இடம் பெறுமா என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்றது.சில நாட்களுக்கு முன்பு கோகுலம் ஸ்டியோவில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்றது.அப்போது கிரிக்கெட் வீரர் தோனியும், விஜய்யும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் பீஸ்ட் படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டிற்கு சென்றும் படமாக்கப்பட்டுள்ளது.

  also read :மெழுகு டாலு நீ.. ப்ரியங்கா மோகனின் லேட்டஸ்ட் படங்கள்..

  இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இயக்குனரான நெல்சன் தனது சமூக வலைதள பக்கத்தில் பீஸ்ட் படத்தை பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அதில் ‘பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் ஆகி விட்டது. இந்த 100 நாட்களும் எங்களுக்கு மகிழ்ச்சியான தினங்களாகவும், அற்புதமான மனிதர்களுடன் பழகும் தினங்களாகவும் இருந்தது ’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  First published: