இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 365 நாட்களும் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் எனவும் விழாவில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜயின் பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுதேசி மில் அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரிசி, சக்கரை, ஆடு, தையல் மிஷின், புடவைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி என பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என மைக்கில் அடிக்கடி அறிவிக்கப்பட்டாலும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. விஜய் படம் பொறித்த அரிசி பை,பிளாஸ்டிக் குடம்,வாளி என மேடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்த்தவுடன் ஆர்வமிகுதியால் மக்கள் மேடையை நெருங்க கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

விஜய் மக்கள் இயக்கம்
இதனால் உடனடியாக நலத்திட்டங்களை புஸ்சி ஆனந்து வழங்கினார். முதலில் ஆடும் அதை தொடர்ந்து 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.அதில் விஜய் படம் அச்சிடப்பட்டது.இதனை மக்கள்,"விஜய் அரிசி..விஜய் அரிசி" என டோக்கன்களை கொடுத்து வாங்கி சென்றனர்.அதிக பேருக்கு அரிசியும் பிளாஸ்டிக் பொருட்கள் கொடுக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கானோர் மேடையை நெருங்க கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் இயக்கத்தினர் எப்படியோ சமாளித்து அனைத்தையும் கொடுத்தனர்.
மேலும் படிக்க: நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் CDP வெளியீடு…
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்சி ஆனந்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும்.விழாவில் ஏழை எளியோருக்கு நல உதவிகள் வழங்கப்படும்.நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் நிச்சயம் விஜய் பிறந்த விழா நடத்தி நல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.