ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

T Rajendar : நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி.ராஜேந்தர் தமிழ்த்திரையில் வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கியவர். தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமான அவர், இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, இசையமைப்பாளர், மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் பரிமாணம் கொண்டவர். பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர்.

என் தங்கை கல்யாணி, உள்ளிட்ட குடும்ப பாங்கான  பல வெற்றிப்படங்களைக் கொடுத்து, இல்லத்தரசிகளின் மனங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர். இந்நிலையில் அவருக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்,  சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த இருதயவியல் துறை மருத்துவர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Must Read : சிறைவாழ்வு குறித்து சுயசரிதை எழுதவுள்ளேன்- பேரறிவாளன்

இதனால், தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது, நல்ல முறையில் அவர் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

First published:

Tags: Chennai, Hospitalised, T Rajendar