• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் ஆசையை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்

சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் ஆசையை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமார் - எஸ்.வீ சேகர்

ஜெயக்குமார் - எஸ்.வீ சேகர்

சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் ஆசையை அரசு நிறைவேற்றும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்,

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாஜக நிர்வாகி எஸ்.வி சேகர் சமீபத்தில் அதிமுக அரசை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தனர்.

    வழக்கு போட்டால் ஓடி ஒளிந்துகொள்வார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் அரசு மற்றும் முதல்வர் குறித்து எஸ்.வி சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    Also read: ஊரடங்கால் தொழிலை இழந்து தவித்தவருக்கு புதிய தொழில் தொடங்க உதவிய மாணவிகள்

    காவி நிறம் களங்கம் என்றால் தேசியக் கொடியில் ஏன் காவி நிறம் என்கிற வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ”தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் பற்றி அவதூறாகப் பேசியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எஸ்.வி.சேகர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை, அரசு அதை நிறைவேற்றும்” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: