கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா!

கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா!

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வரும் சூர்யாவிற்கு இன்று பிறந்தநாள்.

"தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது"

  • News18
  • Last Updated :
  • Share this:
நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையை விமர்சித்து தான் கூறிய கருத்துக்களுக்கு ஆதரவளித்தமைக்காக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களையும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களையும் சமதளத்தில் வைத்து பார்க்ககூடாது என்றும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார்.

சூர்யாவுக்கு எனது ஆதரவு உண்டு! புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் ஆதரவு கரம் நீட்டும் கமல்

அதற்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்து சூர்யா வெளியிட்ட அறிக்கையில், தனது கருத்துக்களுக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக தங்களுக்கும் தங்களுடைய அமைப்புக்கும் நன்றிகள் எனக் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை


மேலும் தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...
மு.க.ஸ்டாலினையும், சூர்யாவையும் விமர்சிக்கும் தமிழிசை செளந்திரராஜன்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: