Home /News /tamil-nadu /

நண்பர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

நண்பர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Rajinikanth: மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் போன்ற திரைப்பரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மு.க.ஸ்டாலினின்  69வது பிறந்தநாளை திமுகவினர் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தனது பிறந்தநாளை மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

    கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் தான் எழுதிய உங்களில் ஒருவன் என்னும் தனது வாழ்க்கை சுயசரிதையும் அங்கு வைத்து மரியாதை செலுத்தினார்.

     



    மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்; என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: MK Stalin, Rajinikanth

    அடுத்த செய்தி