சிவசங்கர் பாபா மிகவும் நல்லவர்; பெண்கள் மீது நாட்டமற்றவர் - நடிகர் சண்முகராஜா

சண்முகராஜன்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக நடிகர் சண்முகராஜன் களமிறங்கியுள்ளார்.

 • Share this:
  செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது. இந்தப் பள்ளியின் நிறுவனர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா.  கூளிங்கிளாஸ், பேன்ட், சர்ட் , உயரக சொகுசு கார்கள் ,கண்ணாடி மாளிகை வீடு என்று மற்ற சாமியார்களை விட ஹய்கிளாஸ் மனிதனாக காட்டி கொள்பவர் சிவசங்கர் பாபா. தன்னை கடவுளாக அறிவித்துக்கொண்டவர். இவரது பள்ளியில் படித்த மாணவிகளில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தற்போது முன்னாள் மாணவிகள் ஏராளமானோர் புகார் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்புக் குழு விசாரணை நடத்திவருகிறது. இதுதொடர்பாக, சிவசங்கர் பாபா மீது காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  இந்தநிலையில் விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரும் சிவசங்கர் பாபாவின் சீடருமான சண்முகராஜன் பாபாவுக்கு ஆதரவாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ’எனது குரு சிவசங்கர் பாபா.. நான் ஆறு வருடமாக சித்தர் வழிபாட்டில் இருக்கேன். கடந்த நான்கு வருடங்களாக சிவசங்கர் பாபாவுடன் இருக்கிறேன். அவர் குறித்து இதுவரையில் ஏழு நூல்கள் தொகுத்துள்ளேன். அப்துல் ரகுமானின் மாணவர் பாபா. கடந்த 20 தினங்களாக பாபா பாலியல் குற்றவாளி என்று நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அதில் ஒருதுளி கூட உண்மை கிடையாது. இது முற்றிலும் பொய் குற்றச்சாட்டு. இந்த பொய் குற்றச்சாட்டுக்கு காரணம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் அமிர்தா பாலாஜி, ஆசிப் என்ற இருவரும்தான்.

  பத்ம சேஷாத்ரி சூழலை காரணமாக வைத்து புகார் தெரிவித்துள்ளனர். உண்மையில் அந்த மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகத்தில் உள்ள இருவர் மீதுதான் கோபம். மண் சார்ந்த சித்த வழிபாட்டை முன்னெடுப்பவர் பாபா. அவர், சாதி, மதம் கிடையாது. பெண்கள் மீது எந்த நாட்டமும் கிடையாது. நிறையப் பெண்களை மரியாதையுடன் நடத்தி படிக்கவைத்துள்ளார். அவருக்கு உலகம் முழுவதும் சீடர்கள் உள்ளனர். அவர், இந்து பிராமின் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் சாதிக்கு அப்பாற்பட்டவர். பள்ளியில் எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் படிக்கின்றனர். எல்லா மதத்தினருக்கும் பாபா கோயில் கட்டிவைத்துள்ளார். அவரை, காமக் கொடூரன் போல சித்தரித்துள்ளனர். ஊடகங்கள் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

  இந்த விவகாரம் தவறாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் பாபாவின் சீடர்கள் 50 லட்சம் பேர் மன உளைச்சலில் உள்ளோம். பாபாவுக்கு ஆதரவாக இனிமேல் ஏராளமானோர் கருத்து பதிவு செய்வோம். பாபா, மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்துவருகிறார். நான் கொடுத்த காரைக் கூட அவர் வாங்கவில்லை. ஏராளமான கலப்புத் திருமணம் செய்துவைத்துள்ளார். இரு தரப்பையும் காவல்துறை தீவிரமாக விசாரிக்கவேண்டும். தற்போதைய ஆட்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நேர்மையாளர் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது. பள்ளி நிர்வாகக் குழு சார்பில் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டிய முடிவில் இருக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பள்ளி நிர்வாகத்தை விளக்கம் செய்ய சொல்லி நாங்கள் வலியுறுத்திவருகிறோம். அவர்கள் முறையான விளக்கம் அளிக்காததன் காரணமாகத்தான் போக்ஸோ அளவுக்குச் சென்றுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தை விளக்கம் அளிக்கச் செய்யச் சொல்லி போராட்டம் நடத்த உள்ளோம்’ என்று விளக்கமளித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: