Home /News /tamil-nadu /

அண்ணன் ஸ்டாலின், தம்பி ராகுல்... உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டில் சத்யராஜ் கலகலப்பு

அண்ணன் ஸ்டாலின், தம்பி ராகுல்... உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டில் சத்யராஜ் கலகலப்பு

சத்யராஜ்

சத்யராஜ்

உங்களின் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை சத்யராஜ் தம்பி என்று அழைத்தார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

    கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக்கொண்டார். இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார். பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளிக்கொண்டுவந்துள்ளது.

    இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு மேடையில் இடமளிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், ‘தமிழ் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்த ராகுல்காந்திக்கு எனது பாராட்டுக்கள்.

    ஒரு சிங்கத்தைப்போல அவர் நாடாளுமன்றத்தில் முழங்கினார். பெரியார், சமூக நீதி, காரல் மார்க்ஸை படித்தவர்கள் சிறந்த மனிதர்களாக இருக்க முடியும். நம் மனிதர்களாக இருக்க வேண்டுமென்றால் முதலில் மனிதநேயம் நமக்குள் இருக்க வேண்டும். பெரியாரின் சமூக நீதியையும், காரல் மாக்சின் பொருளாதார கொள்கைகளையும் படித்தால் மட்டுமே நம்மால் அப்படி இருக்க முடியும்.

    திமுகவில் எல்லாரும் அண்ணாவின் தம்பி என அழைத்துக்கொள்வார்கள்.  திராவிட இயக்க வழக்கப்படி ராகுலை நான் தம்பி என்றும், முதல்வர் ஸ்டாலினை அண்ணன் என்றும் அழைக்கிறேன்.மேலும் உங்களின் ஒருவன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்டாலின் என்ற பெயர் சூட்டப்பட்ட சம்பவம், பள்ளியில் சேர்வதற்கு ஸ்டாலின் என்ற பெயர் இடையூறாக இருந்ததால் பள்ளி மாற்றப்பட்ட விவரம், தெருக்களில் மு.க.ஸ்டாலின் போட்ட மேடை நாடகங்கள், ஸ்டாலினை எம்.ஜி.ஆர் பாராட்டிய சம்பவம் உள்ளிட்ட விவரங்களையும் சத்யராஜ் நினைவு கூர்ந்து பேசினார். சத்யராஜ் அவருக்கு உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி அனைவரையும் கலகலப்பூட்டினார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Rahul gandhi, Sathyaraj

    அடுத்த செய்தி