• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக பா.ஜ.க தலைவர் பட்டியலில் என் பெயர் உள்ளது... நான் தலைவரானால் - எஸ்.வி.சேகர் அதிரடி

தமிழக பா.ஜ.க தலைவர் பட்டியலில் என் பெயர் உள்ளது... நான் தலைவரானால் - எஸ்.வி.சேகர் அதிரடி

எஸ்.வி.சேகர் - நடிகர்

எஸ்.வி.சேகர் - நடிகர்

  • Share this:
    தமிழக பா.ஜ.க தலைவர் நியமனத்துக்கான பெயர் பட்டியலில் தன்னுடைய பெயரும் இருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

    தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றதை அடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே தமிழக தலைவர் பதவி நியமனத்துக்கான பட்டியலில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், குப்புராமு உள்ளிட்டோரது பெயர்களும் அடிபட்டன.

    இந்நிலையில் திருக்கடையூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த எஸ்.வி.சேகர், “தமிழக பா.ஜ.க தலைவர் நியமனத்திற்கான பெயர் பட்டியலில் எனது பெயரும் உள்ளது. என்னை தமிழக பா.ஜ.க தலைவராக்கினால் சிறப்பாக செயல்படுவேன். ஜாதி அரசியல் செய்ய மாட்டேன். தமிழகத்தில் மோடியின் புதிய திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிவிட்டனர். 1970-க்கு முன்பு இந்தியாவில் இருந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை.

    இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியால் யாரும் பட்டினி கிடக்கவில்லை. எந்த பாதிப்பும் இல்லை. முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு இருந்தது. அதனால் நாட்டில் மக்கள் ஒழுக்கத்துடன் வாழ்ந்தனர். தற்போது நீதி போதனை வகுப்பு இல்லாததால் ஒழுக்கம் கெட்டு விட்டது. 2021-க்குள் ரஜினி அரசியலுக்கு வரும் அதிசயம் நிச்சயம் நிகழும்” என்றார்.

    மேலும் படிக்க: இவர்களுக்கு குடும்பம் இல்லையா... ஆபாச மெசேஜ் அனுப்பியவரை அம்பலப்படுத்திய நந்திதா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: