• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்..? லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்..? லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.

  • Share this:
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகர் ரஜினிகாந்த், மூன்றாவது நாளாக மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்திற்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு மூன்றாவது நாளாக 5-வது தளத்தில் உள்ள சிறப்பு வார்டில் வைத்து மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை குறித்து நேற்று மருத்துவமனையின் செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்திற்கு தலை சுற்றல் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நேற்றிரவு ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், அவரது மருமகன் நடிகர் தனுஷ் ஆகியோர் வருகை தந்தனர். மருத்துவர்களிடம் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் இருவரும் வீடு திரும்பினர். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ரத்த ஓட்ட சீரமைப்பு சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: