சபரிமலையில் ஐதீகங்களை பின்பற்ற வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

மீடூ பெண்களுக்கு சாதகமான ஒன்று. ஆனால் அதை தவறாக பயன்படுத்த கூடாது என்றும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

சபரிமலையில் ஐதீகங்களை பின்பற்ற வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: October 20, 2018, 12:52 PM IST
  • Share this:
சபரிமலை கோயில் விவகாரத்தில் மதம் தொடர்பான விவகாரத்தில் கொஞ்சம் பார்த்து செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

காலா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பேட்ட என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. லக்னோ மற்றும் வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து தமிழகம் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் பேசியதாவது,


டிசம்பர் 12-ம் தேதி கட்சி தொடங்கும் திட்டம் எதுவுமில்லை என்றும், ஆனால் கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத வேலைகள் நடந்து முடிந்து உள்ளது. நல்ல நேரம், காலம் பார்த்து அறிவிப்பேன் என்று கூறினார். சபரிமலை தீர்ப்பு குறித்த விவகாரத்தை பற்றிய கேள்விக்கு, பெண்களுக்கு எல்லாவற்றிலும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால், ஒவ்வொரு கோவிலுக்கு ஒரு சம்பிரதாயம் ஐதீகம் இருக்கும். அதில் யாரும் தலையீட கூடாது என்பதே என் கருத்து என்று கூறினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் எனவும், மத தொடர்பான விஷயங்கள், சடங்களில் கொஞ்சம் பார்த்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். நாடு முழுவதும் எழுந்துள்ள மீடூ விவகாரம் குறித்த கேள்விக்கு, மீடூ பெண்களுக்கு சாதகமான ஒன்று. ஆனால் அதை அவர்கள் தவறாக பயன்படுத்த கூடாது என்றும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். வைரமுத்து தன் மீது குற்றச்சாட்டை நிராகரித்துவிட்டார். அதுபோன்று ஒரு சம்பவமே நடக்கவில்லை. அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் வழக்கை சந்திப்பதாகவும் வைரமுத்து கூறியுள்ளதை எடுத்துக் காட்டி ரஜினி இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் போது எனது நிலைபாட்டை வெளியிடுவதாகவும் கூறினார். பேட்டியை முடிக்கும் போது, பேட்ட பராக்.. என்று பேட்ட படத்தின் வசனத்தை பேசிவிட்டு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
First published: October 20, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்