மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்த் வீடு முற்றுகை! தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை

மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்த் வீடு முற்றுகை! தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை
ரஜினிகாந்த்
  • Share this:
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் குறித்து பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற 23.1.2020 காலை 10 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see:

 
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading