நடிகர் ரஜினிகாந்திற்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நான்கு நாட்களாக 5வது தளத்தில் உள்ள சிறப்பு வார்டில் வைத்து மருத்துவ குழு சிகிச்சை அளித்தது.
இதனிடையே, அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்திற்கு தலை சுற்றல் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ரத்த ஓட்ட சீரமைப்பு சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று இரவு நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார். அவர் இல்லம் திரும்பிய புகைப்படத்தை ஹூட் செயலியில் வெளியிட்டுள்ளார்.
மேலும், தனது புகைப்படத்துடன், ரஜினிகாந்த் தனது குரலில் தான் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் கூறுகிறார். அத்தோடு, தான் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த நல் உள்ளம் கொண்ட ரசிக பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.