பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உணவு வழங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த்

பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உணவு வழங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் போலீசாருக்கு நடிகர் ரஜினிகாந்த் உணவு வழங்கி வருகிறார்.

  • Share this:
ஜனவரி மாதம் 3-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். இதனிடையில் அவருடைய இல்லத்திற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. 12 போலீசார் தினசரி அதே பணியில் ஈடுபடுகின்றனர்.

இச்சூழலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் போலீசாருக்கு நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திலிருந்து உணவு தூக்குவாளி மூலம் வழங்கப்படுகிறது. தினசரி மதியம் போலீசாருக்கு இவ்வாறு உணவு வழங்கியதற்குப் பின்னர், மாலை நேரங்களில் தேனீர் வழங்கப்படுகிறது.

Also read: அரசியல் அறிவிப்பு: வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்திய ரஜினிகாந்த்

தொடர்ந்து பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை வந்துள்ள போலீசார், ஹோட்டல் உணவுகளையே சாப்பிட்டுவரும் நிலையில், வீட்டு உணவு, அதுவும் ரஜினிகாந்த் வீட்டு உணவு என்பதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: