Home » News » Tamil-nadu » ACTOR RAJINIKANTH MEETING WITH MAKKAL MANRA ADMINISTRATOR SUDHAKAR TODAY VAI

மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை

மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

  • Share this:
நடிகர் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனையில் ஈடுபட இருக்கும் நிலையில் இன்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அரசியல் கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தார். எனினும், கட்சி தொடங்குவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா பரவல் காரணமாக கட்சி தொடங்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் முடிவெடுக்க உள்ளதாக ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ரஜினிகாந்த் நாளை தன்னுடைய அரசியல் முடிவு தொடர்பான அறிவிப்பை தன்னுடைய மாவட்ட நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



 

இதற்காக 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் இருந்து நாளை சென்னைக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: November 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading