ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை மீண்டும் ஆலோசனை...!

ரஜினிகாந்த்

 • Share this:
  ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் மீண்டும் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

  சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 5-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் மாவட்டங்களில் ரஜினிக்கு உள்ள ஆதரவு, புதிய கட்சி தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் தாம் முதலமைச்சராகப் போவதில்லை என ரஜினி தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின.

  Also see... நீச்சல் உடையில் போட்டோஸ் வெளியிட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்!

  அன்றைய கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

  மேலும் பேரவைத் தேர்தலில் ரஜனிதான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென தமிழருவி மணியன் கூறியிருந்தார். இந்நிலையில் மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் மீண்டும் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் மகளிர் அணியையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: