அரசியல் அறிவிப்பு: வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்திய ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கப்படவுள்ள நிலையில், அவர் தன் வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தியுள்ளார்.

  • Share this:
நெடுங்காலமாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகள் தமிழகத்தில் இருந்துவந்த நிலையில், அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை சில தினங்களுக்கு முன்பு வெளிப்படுத்தினார்.

இச்சூழலில் ரஜினிகாந்த் இல்லம் முன்பாக அதி நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளார். இந்நிலையில், தனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவரது இல்லம் அமைந்துள்ள போயஸ் தோட்டம் அருகே அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Also read: விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக மீண்டும் கருத்து... சர்ச்சையில் சிக்கும் நடிகை கங்கனா

வீட்டின் முன்பு உள்ள பகுதி, அவரது இல்லத்திற்குத் திரும்பும் பகுதி ஆகிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரசிகர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அவரது இல்லம் வரும்போது வீட்டின் உள்ளே இருந்தே பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுள்ளது. இதில் பதிவாகும் காட்சிகள் பல மாதங்கள் வரை இருக்கும் வகையிலான அதிநவீன சிசிடிவி கேமராவாக அவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: