Exclusive: முதல்வர் வேட்பாளர் யார்? நியூஸ்18 செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ரஜினியின் ரியாக்‌ஷன் என்ன?

Exclusive: முதல்வர் வேட்பாளர் யார்? நியூஸ்18 செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ரஜினியின் ரியாக்‌ஷன் என்ன?
ரஜினிகாந்த்
  • Share this:
முதல்வர் வேட்பாளர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அந்த கூட்டத்தில் ஒரு விசயம் தனக்கு ஏமாற்றமாக இருந்தது என குறிப்பிட்டார். இதுதொடர்பாக பல செய்திகள் வெளியான நிலையில், ரஜினிகாந்த் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக தகவல் வெளியானது.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 25 ஆண்டுகளாக, நான் அரசியலுக்கு வருவதாக கூறிவருகிறேன் என்று கூறி வருகின்றனர். ஆனால் 2017-ல்தான் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தேன் என்று விளக்கம் அளித்தார்.


ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியலில் நிலையற்றத் தன்மை ஏற்பட்ட போது, அதனைக் கருத்தில் கொண்டே அந்த முடிவை எடுத்ததாகவும் ரஜினி கூறினார். ஆனால் மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஆட்சிக்கு வருவது வீண் என்றும் ரஜினிகாந்த் ஆதங்கம் தெரிவித்தார்.

தான் முதலமைச்சராக விரும்பவில்லை. கட்சி வேறு ஆட்சி வேறு என்ற கொள்கை அடிப்படையில் ஒரு மாற்று அரசியலை முன்னிறுத்தி திட்டம் தீட்டி வருகிறேன். இதை அனைத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொருவருடைய பொறுப்பு என்று சுமார் 45 நிமிடம் தொடர்ச்சியாக பேசினார்.

Also read... ரஜினியால என் பொழப்பே போச்சு... ரஜினி புகைப்படம் விற்பவர் புலம்பல்...!பின்பு செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மேடையில் இருந்து புறப்பட்டார். தொடர்ந்து சென்று நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

நீங்கள்தான் முதலமைச்சர் என ரசிகர்கள் நம்பி இருக்கும் சூழலில் நீங்கள் முதல்வர் இல்லை என்று கூறுவதை அவர்கள் ஏற்பார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், ’அதனை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தெரிவித்தார்.

அதேபோல யாரை முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் முன்னிறுத்த வாய்ப்பு இருக்கிறது என்றும் யார் அந்த தகுதியான வேட்பாளர் தமிழருவி மணியன் ?அல்லது கமலஹாசனா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

Also see...
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading