• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எதற்காக அரசியலுக்கு வருகிறேன் எனத் தெரியுமா?- நடிகர் ரஜினிகாந்த் தன்னிலை விளக்கம்!

எதற்காக அரசியலுக்கு வருகிறேன் எனத் தெரியுமா?- நடிகர் ரஜினிகாந்த் தன்னிலை விளக்கம்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

'பெயருக்காகவோ, புகழுக்காகவோ, பணத்துக்காகவோ, பதவிக்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை.'

  • News18
  • Last Updated :
  • Share this:
    ”நான் எதற்காக அரசியலுக்கு வருகிறேன் தெரியுமா? உண்மையான ஜனநாயகம் அமைய வேண்டும் என்பது எனது கனவு. இதை நிறைவேற்றவே அரசியலுக்கு வருகிறேன்” என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும் ரஜினிகாந்த் கூறுகையில், “மாற்று அரசியலே எனது விருப்பம். உண்மையான ஜனநாயகம் அமைய வேண்டும் என்பது எனது கனவு. இதற்காகத்தான் நான் அரசியலுக்கு வருகிறேன். பெயருக்காகவோ, புகழுக்காகவோ, பணத்துக்காகவோ, பதவிக்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை.

    ஊழல் இல்லாத வளமான தமிழகத்தை உருவாக்க விரும்பும் தமிழக மக்கள் எனது நல்ல நோக்கத்தை சரியாகப் புரிந்துகொண்டு நான் விரும்பும் அரசியல் மாற்றத்துக்கும் ஆட்சி மாற்றத்துக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

    மேலும் பார்க்க: கட்சித் தலைவராக மட்டுமே நான் பதவி வகிப்பேன்..!- முதல்வர் வேட்பாளர் குறித்து ரஜினி விளக்கம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: