”அடுத்த ஓட்டு ரஜினிக்கே” ஹேஷ்டேக் போட்டவர்களை ஏமாற்ற மாட்டேன் - ரஜினிகாந்த்

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டால், அரசியல் அறிவிப்பு வரும். மோடி பிரதமராவது மே 23-க்கு அடுத்து தெரியும் என்று கூறினார்.

news18
Updated: April 19, 2019, 2:07 PM IST
”அடுத்த ஓட்டு ரஜினிக்கே” ஹேஷ்டேக் போட்டவர்களை ஏமாற்ற மாட்டேன் - ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்
news18
Updated: April 19, 2019, 2:07 PM IST
”அடுத்த ஓட்டு ரஜினிக்கே” என்ற ஹேஷ்டேக் நேற்று டிரெண்ட் ஆன நிலையில், ரசிகர்களின் ஆர்வம் புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்ற நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் , #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கினர். இந்த ஹேஷ்டேக்  இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் இது தொடர்பான கேள்வியை எழுப்பினர்.

அதற்கு, “அவர்களின் ஆர்வம் புரிகிறது. நிச்சயமாக அவர்களை ஏமாற்றமாட்டேன்” என்று கூறினார்.

தமிழகத்தில் நல்ல முறையில் தேர்தல் நடந்துள்ளது. முந்தைய காலங்களை விட தற்போது அமைதியான முறையில் தேர்தல் நடந்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டால், அரசியல் அறிவிப்பு வரும். மோடி பிரதமராவது மே 23-க்கு அடுத்து தெரியும் என்று கூறினார்.First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...