Home /News /tamil-nadu /

'இமயமலை செல்லுங்கள், பேரன் பேத்தியுடன் விளையாடுங்கள்...’ ரஜினிக்கு சீமான் அட்வைஸ்

'இமயமலை செல்லுங்கள், பேரன் பேத்தியுடன் விளையாடுங்கள்...’ ரஜினிக்கு சீமான் அட்வைஸ்

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இன்று ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகளை நடும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை அம்பத்தூரில் TTP காலனி பகுதியிலுள்ள சதா குள கரையில் பனை விதை மற்றும் அரச மர கன்றுகளை நடவு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ”ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை. 1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சிகள் மரம் நட முயற்சி எடுக்கவில்லை. ராமர் கோவிலுக்கு கல் எடுத்து வரச் சொன்ன பிரதமர், மரம் நட வேண்டும் எனக் கூறவில்லை” என்றார்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சியின் நிலைப்பாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ”நாம் தமிழர் கட்சி மக்களிடம் கூட்டணி வைத்துள்ளது. சில கட்சிகள் கொள்கை முரண் இருந்தாலும் கூட்டணி வைத்துக்கொள்கின்றன. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். 117 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்கத் தயாராக உள்ளனர். அவர்கள் பணியைத் திறம்படச் செய்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

    Also read: பிரான்ஸிலிருந்து பிரிந்து தனிநாடாக 'நியூ கலிடோனியா' மாறுவது குறித்து வாக்கெடுப்பு



    அவர் மேலும் பேசுகையில், ”காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி பாஜக மனித குல எதிரி. தேர்தல் ஆணையம், நீதிமன்றம், சிபிஐ அமைப்புகள் பிரதமர் மோடியின் விரல்கள் போன்றது. அவர் நீட்டச் சொன்னால் நீட்டும், மடக்கச் சொன்னால் மடக்கும்” என்று விமர்சித்தார்.

    என்றைக்கு நடிகர் ரஜினி வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என்றாரோ அன்றைக்கே அவரிடம், தான் கொண்டிருந்த முரண்பாடு நீங்கியதாகக் கூறிய சீமான், ”நடிகர் ரஜினிக்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோள் அரசியலில் இறங்க வேண்டாம் என்பது. புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர் அவர்; நாங்கள் சந்திப்பது போன்ற அவச்சொற்களை அவரால் தாங்க முடியாது. நன்றாக புத்தகம் படியுங்கள், இமயமலை செல்லுங்கள், பேரம் பேத்தியுடன் விளையாடுங்கள். அரசியலுக்கு வந்தால் உங்களை இறக்கிவிட்டவர்களே வசைபாடுவார்கள்” என்றார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Rajinikanth, Seeman

    அடுத்த செய்தி