• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரஜினியின் முன் ராகவா லாரன்ஸ் விமர்சனம்... சீமான் பதில்...!

ரஜினியின் முன் ராகவா லாரன்ஸ் விமர்சனம்... சீமான் பதில்...!

லாரன்ஸ் மற்றும் சீமான்

லாரன்ஸ் மற்றும் சீமான்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் முன்வைத்துள்ள விமர்சனத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

    ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் அனிருத், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்றனர்.

    விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், ரஜினிகாந்த் பப்ளிசிட்டிக்காக அரசியலுக்கு வருவதாக நாம் தமிழர் கட்சி சீமான் பேசிவருவதை மறைமுகமாக சாடினார். சீமானின் பேச்சு நாட்டிற்கு நல்லது அல்ல என்று விமர்சித்த லாரன்ஸ், இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், தெலங்கானாவில் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டதை மக்கள் உணர்வோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் சட்டரீதியாக அணுகினால் உடனடியாக நீதி கிடைக்காது எனவே இது போன்ற பிரச்சனைகள் வரும் போது உடனடியாக தண்டனை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இந்தியா போன்ற இத்தனை பெரிய நாட்டில் ஒரு வெங்காயத்தை மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை என்பது அவமானமாக உள்ளது

    நான் வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு உண்பது இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்வது என்றார்.

    மேலும், தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் சீமான் பேசுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார் இது குறித்த கேள்விக்கு, “தம்பி ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என்று தெரியவில்லை. நான் என் நாட்டிற்காக பேசி வருகிறேன்.

    உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி தயாராக இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் எங்கள் வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள்” என்று அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: